Tuesday, 27 January 2015

குழல் ஓசை

காற்றில் மிதந்து கந்தம் வரும்,
கனவு வரும் காதல் கூட வரும் (என்று சொல்வார்).
வரும், வருவது தங்குமா?
வந்த வழியே விடைபெறக்கூடும்.

காந்தமாய் இழுக்கும் கண்ணன்
கானமாய்ப் பொழியும் அவன் குழல்,
எனையும் சற்றே  பற்றாதோ?
நினைவில் நின்றே ஆளாதோ?

உருகும் பக்தர் சங்கமே
குறுகும் வாழ்வில் வேண்டியது.
கிருஷ்ணர் கதை சொல்லும் அழகில்
உருவகித்து அமர்த்துவார், பாகவதாள் தானுமே!

கதையில் லயித்து கேட்போரும்
அதைச் சொல்லிதானும் மகிழ்வோரும்
உள்ளவரை, இப்பூவுலகில் பக்தி,
வெள்ளமாய்ப் பாய்ந்திடும், நம்புகிறேன்!

Saturday, 24 January 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !



மனம் அமைதியாய் இருக்கும் போதே செய்ய நினைப்பது அனைத்தையும் யோசிக்காமல் செய்து விட வேண்டும். அன்றேல், இந்த மனம் எப்போது எங்கே தாவும் என்று சொல்ல முடியாது.

முன்பெல்லாம் என் கோபத்தை ஆத்திரத்தை வார்த்தைகளில் எழுதி திட்டித் தீர்க்கும் நிறைவைப் பெறுவேன். சொல்ல முடியாமல் திணறுவது போல் தோன்றும். அந்தப் போராட்டம் சொல்லபோனால் என் வாழ்க்கையில் இருந்தது என்பதை விட என் மனதில் மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த நிலையில் அது ஒரு வடிகாலாக இருந்தது.

இருப்பினும் அது பழக்கம் ஆகிவிட்டது, உணர்வுகளைப் பதிவு செய்வது. எனவே நல்ல உணர்வுகளையும் பதிவு செய்யத் தொடங்கினேன். வடிகால் என்பதற்காக அல்ல. மனம் கொள்ளவில்லை. என் நினைவாற்றல் நினைவகம் போதவில்லை. சேமிக்க ஒரு பெட்டகம் வேண்டியே வார்த்தைகளால் மாலை கோர்த்து சேர்த்து வைக்கிறேன். என் கணவர் பற்றி மட்டுமல்ல, பிள்ளைகள், பெற்றோர், தமக்கை, நண்பர், தோழியர், தெய்வம் அனைவரைப் பற்றியும்.

Friday, 1 August 2014

From the Soul: வாய்ப் பூட்டு

From the Soul: வாய்ப் பூட்டு: பெண்ணே உன் வாய்க்கு போடு ஒரு பூட்டு. "அடித்தாரை சொல்லி அழு" தொட்டிலில் மட்டுமே! பொறுத்துக்கொள் மகளே  அறுத்தெறிவார் ச...

From the Soul: மழைத் தோழன்

From the Soul: மழைத் தோழன்: வந்து வந்து போகும் மழையே! உன் வருகை  என் தனிமையை தகர்க்கிறது. ஒரு தோழமையைத் தருகிறது. உன் சலசலப்பை  நான் கேட்க, பதிலுக்கு என்...

From the Soul: தென்றல் பேசியது!

From the Soul: தென்றல் பேசியது!: ஆசையாய் வீசும் காற்று ஆயிரம் என்னிடம் சொல்கிறது. கிசுகிசுக்கும் மரக்கிளைகள்  கீச்சுகீச்சென்னும் பறவைகள் ஒத்து ஊதி வருகின்றன ...

From the Soul: தவளை ராஜ்யம்!

From the Soul: தவளை ராஜ்யம்!: விட்டுப் போன மழையில்  ஒட்டி நின்ற மேகம் விலக  ஞாயிறு தானும் விடைபெற சாயங்கால இருட்டுக் கவ்வ,  தவளை அதன் ராஜ்யம்  வானிலை அறிக்கை அ...

From the Soul: தோசை சொன்ன பாடம்!

From the Soul: தோசை சொன்ன பாடம்!: தனித்துவம் தரும் குறிகள்  மனிதனுக்குப் பலப் பல உடல் எடை உயரம் நிறம்  முக ஜாடை , முடி நீளம் எனப் பல கைஎழுத்தும் ஒரு குணமே வையத்தி...